2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.2% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
துறைவாரியான வளர்ச்சி:
விவசாயம்: -2.3% சரிவு
கைத்தொழில்: +7.3% வளர்ச்சி
சேவைகள்: +2.7% வளர்ச்சி

குறிப்பாக, கட்டுமானத் துறை 13.9% வளர்ச்சியையும், சுரங்கம் மற்றும் குவாரி நடவடிக்கைகள் 17.4% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன. உற்பத்தித் துறையும் 3.2% வளர்ச்சி கண்டுள்ளது.
இதனிடையே, அரிசி, தேயிலை, இறப்பர், கரும்பு, புகையிலை மற்றும் மீன்பிடி உள்ளிட்ட சில விவசாய நடவடிக்கைகளின் வீழ்ச்சி காரணமாக விவசாயத் துறை 2.3% சுருங்கியுள்ளது.
சேவைகள் துறையின் வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், தொலைத்தொடர்பு, போக்குவரத்து மற்றும் தங்குமிடம்–உணவு சேவைகள் உள்ளிட்ட துறைகள் பங்களித்துள்ளன.





