இலங்கையில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ‘சிலி சிலி’ (Sili-Sili) பைகளை இலவசமாக வழங்கக்கூடாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) எச்சரித்துள்ளது.
2025 ஒக்டோபர் 1ஆம் திகதி வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி இலக்கம் 2456/41 – Direction No. 95 இன் கீழ் இந்த நடைமுறை அமுலில் உள்ளது. இது 2025 நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
🔹 LDPE அல்லது LLDPE வகை பைகளை வழங்கினால், அதற்கான விலையை வாடிக்கையாளரிடம் அறவிட வேண்டும்.
🔹 பையின் விலை விற்பனை நிலையத்தில் தெளிவாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
🔹 அறவிடப்படும் தொகை வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் பில்லிலும் குறிப்பிடப்பட வேண்டும்.
🔹 வியாபாரிகள் பைகள் தொடர்பான கொள்வனவு பில்கள், விலைப்பட்டியல்கள் மற்றும் விநியோகஸ்தர் தகவல்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் பையின் விலை கடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், பைக்காக அறவிடப்பட்ட தொகை பில்லில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்குமாறு CAA அறிவுறுத்தியுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என CAA தெரிவித்துள்ளது.
மேலும், தேவையற்ற பொலித்தீன் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை (Reusable Bags) பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





