பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எயார்பஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
முன்னதாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் இடம்பெற்றது.
🔴 எதிர்வரும் 23.09.2026 வரை நாமல் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





