ருமேஷ் தாரங்கவின் ஜாவலின் உபகரணங்களுக்கு இழப்பீடு வழங்க Turkish Airlines இணக்கம்!

உலக ஜாவலின் சாம்பியனான இலங்கை வீரர் ருமேஷ் தாரங்கவின் ஜாவலின் உபகரணங்கள் சேதமடைந்த சம்பவம் தொடர்பில், Turkish Airlines இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள இணங்கியுள்ளது.

நேற்று (15) சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நிறுவன ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, ஏற்பட்ட சேதம் முறையாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் இழப்பீடு வழங்கப்படும் என Turkish Airlines பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஹங்கேரியிலிருந்து இலங்கை திரும்பியபோது ருமேஷ் தாரங்கவுக்குச் சொந்தமான நான்கு ஜாவலின்கள் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore