ஜப்பானின் புகழ்பெற்ற மவுண்ட் புஜி (Mount Fuji) மலையில் அதிகாரப்பூர்வ ஏறும் பருவத்திற்கு வெளியே மலையேறி, ஹெலிகொப்டர் மூலம் மீட்பு தேவைப்படும் நிலை ஏற்பட்டால், அடுத்த ஆண்டு முதல் மீட்பு சேவைக்காக கட்டணம் அறவிடப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை, போதிய தயாரிப்பின்றி மற்றும் பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து பருவகாலத்திற்கு வெளியே மலையேறும் நபர்களைத் தடுக்கும் நோக்கில் ஜப்பானின் யமனாஷி மாகாணத்தால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
🔹 பருவகாலத்திற்கு வெளியே மலையேறுவோர் விரிவான மலையேற்றத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
🔹 அருகிலுள்ள சைதாமா மாகாணத்தில் அமுலில் உள்ள 5 நிமிடங்களுக்கு 8,000 யென் கட்டணம் இதற்கான முன்மாதிரியாக பயன்படுத்தப்படவுள்ளது.
🔹 பருவகாலத்திற்கு வெளியே ஏறுவதை தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📌 மவுண்ட் புஜியின் அதிகாரப்பூர்வ மலையேற்றப் பருவம் ஜூலை முதல் செப்டம்பர் ஆரம்பம் வரை ஆகும். ஆண்டுதோறும் சுமார் 2 இலட்சம் பேர் மலையின் உச்சியை அடைய முயற்சிக்கின்றனர்.
⚠️ பருவகாலத்திற்கு வெளியே மலையேற்றப் பாதைகள் கடுமையான வானிலை மற்றும் பாதை நிலைமைகளைக் கொண்டிருப்பதுடன், பெரும்பாலான மலை தங்குமிடங்களும் கழிப்பறை வசதிகளும் மூடப்பட்டிருக்கும்.





