தில்சாத் பர்வீஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 32ஆவது பேராளர் மாநாட்டில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ நளீம் ஜனாப், கட்சியின் உயர்பீட உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 32ஆவது பேராளர் மாநாடு இன்று (16) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது இடம்பெற்ற கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கான தெரிவிலேயே நளீம் ஜனாப் தெரிவு செய்யப்பட்டு, புதிய பொறுப்பை பெற்றுள்ளார்.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினராக செயற்பட்டு வரும் நளீம் ஜனாப், தற்போது கட்சியின் உயர்பீடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சம்மாந்துறைக்கு கிடைத்துள்ள முக்கிய அரசியல் அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.





