கொழும்பு, செப். 16, 2026:
நாளை (17) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ரயில்வே வேலைநிறுத்தம் காரணமாக, இன்று இரவு இயக்கப்படவிருந்த 6 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் சேவைகளில்:
🔹 இரவு 7.00 மணி – கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி
🔹 இரவு 8.00 மணி – கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி
🔹 இரவு 9.30 மணி – மட்டக்களப்பு நோக்கிய இரவு அஞ்சல் ரயில்
உள்ளிட்ட ரயில் சேவைகள் அடங்குகின்றன.
எவ்வாறாயினும், இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது தொடர்பில் ரயில்வே திணைக்களம் அல்லது போக்குவரத்து அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.





