Knuckles மலைத்தொடரில் உள்ள Mini World’s End பகுதியில் இருந்து தவறி விழுந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட 27 வயதுடைய இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Menikhinna, Lunuketiya Maditta, Kandegammedda பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து காணாமல் போனதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரது கையடக்கத் தொலைபேசி மொபைல் டவர் தகவல்களின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், Knuckles வனப் பகுதியில் அமைந்துள்ள Mini World’s End-ன் மத்திய பகுதியில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலைச்சரிவில் சடலம் சிக்கியிருந்ததால் அதனை கீழே கொண்டுவருவது கடினமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து Ududumbara பொலிஸார், இராணுவ கொமாண்டோ படையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை Ududumbara பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





