மட்டக்குளியில் கோர வாகன விபத்து – இருவர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்

மட்டக்குளி பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் பலத்த காயமடைந்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, வீதியில் பயணித்த கார் ஒன்று 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore