28 ஆண்டுகளாக உலகை நடந்தே சுற்றும் சாகசப் பயணி – 48,000 கி.மீ பயணித்து இலக்கை நெருங்குகிறார்!

உலகை முழுமையாக நடந்தே சுற்றும் இலக்குடன் கடந்த 28 ஆண்டுகளாகப் பயணித்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த சாகசப் பயணி கார்ல் புஷ்பி, தற்போது தனது நீண்ட பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளார்.

57 வயதான கார்ல், 1998ஆம் ஆண்டு தனது 29வது வயதில் சிலியிலிருந்து இந்தப் பயணத்தைத் தொடங்கினார். எந்தவொரு போக்குவரத்து சாதனத்தையும் பயன்படுத்தக் கூடாது என்பதும், பயணம் நிறைவடையும் வரை பிரிட்டனுக்குத் திரும்பக் கூடாது என்பதும் அவரது முக்கிய விதிகளாக இருந்தன.

இதுவரை அவர் 48,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்து பல்வேறு நாடுகள் மற்றும் கடுமையான நிலப்பரப்புகளைக் கடந்துள்ளார்.

தென் அமெரிக்காவின் டேரியன் கேப் காடுகள், பேரிங் நீரிணை, சைபீரியா, மங்கோலியா, சீனா உள்ளிட்ட பல பகுதிகளை கடந்த அவர், காஸ்பியன் கடலையும் நீந்திக் கடந்து ஐரோப்பாவை அடைந்துள்ளார்.

பயணத்தின் போது விசா கட்டுப்பாடுகள், பொருளாதார நெருக்கடி, கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் புவிசார் அரசியல் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் அவரது பயணம் எதிர்பார்த்ததை விட நீண்டுள்ளது.

🌊 அடுத்த சவால் – ஆங்கிலக் கால்வாய்

தற்போது பெல்ஜியத்தின் மான்ஸ் நகரை அடைந்துள்ள கார்ல், பிரான்ஸின் கலேஸ் பகுதிக்குச் சென்று அங்கிருந்து ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்து இங்கிலாந்தை அடைய திட்டமிட்டுள்ளார்.

யூரோடன்னல் வழியாக செல்ல அனுமதி கிடைக்காததால், இந்த நீச்சல் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது நீண்ட பயணத்தில் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் “விடாமுயற்சியே முக்கியமானது” என்பதுதான் என கார்ல் கூறுகிறார்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ஊரான ஹல் நகரை நோக்கிய பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த சாகசப் பயணத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore