எரிபொருளுக்கு மானியமா? விலைத் திருத்தமா? – அரசாங்கம் தீவிர ஆலோசனை

எதிர்காலத்தில் எரிபொருளுக்கு மானியம் வழங்குவதா அல்லது விலையைத் திருத்துவதா என்பது தொடர்பில் அரசாங்கம் தற்போது கலந்துரையாடி வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் ஏனைய எரிபொருள் விநியோக நிறுவனங்கள் விநியோகத்தை குறைத்ததன் காரணமாக, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அனைத்து எரிபொருள் விநியோக நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தங்களுக்கு ஏற்படும் நஷ்டம் தொடர்பில் நிறுவனங்கள் இதன்போது அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, RM Parks நிறுவனம் ஒரு லீற்றர் டீசலுக்கு ரூ.173 மற்றும் பெற்றோலுக்கு ரூ.38.75 நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Sinopec நிறுவனம் டீசல் லீற்றருக்கு ரூ.192 மற்றும் பெற்றோல் லீற்றருக்கு ரூ.67 நஷ்டம் ஏற்படுவதாகவும், IOC நிறுவனம் டீசல் லீற்றருக்கு ரூ.136 மற்றும் பெற்றோல் லீற்றருக்கு ரூ.57 நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு தேசிய பொறுப்பு இருப்பதாகவும், வர்த்தக நிறுவனங்கள் நஷ்டத்தில் எரிபொருளை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் எரிபொருளை விற்பனை செய்ய அனுமதிப்பதா அல்லது அரசாங்கம் தலையிட்டு மானியம் வழங்குவதா என்பது தொடர்பில் தற்போது ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாகவும் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore