22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்டம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (24) நடைபெறவுள்ளது.

“ஜனநாயகத்தைச் சூறையாடும் 22 வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் காலை 9.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சுதந்திரப் போராட்ட மையம், தற்போதைய சர்ச்சைக்குரிய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று மற்றும் நாளை (25) நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலின்படி, இன்று காலை 11.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்தில், மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore