“அமெரிக்காவுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம்” – ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான நீடித்து வரும் மோதலுக்கு மத்தியில், ஈரான் ஒருபோதும் அழுத்தங்களுக்கு அடிபணியாது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், மோதலுக்கு இராஜதந்திர ரீதியான தீர்வை எட்டுவதற்கு ஈரான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தடைகள், அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஈரானை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, எந்தவொரு உடன்பாட்டையும் எட்ட வேண்டுமெனில் ஈரானிய கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான அமெரிக்கத் தடைகள் நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உலகின் பல நாடுகள் பயன்படுத்தும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் பயன்படுத்துவதற்கு தடைகள் விதிக்கப்படுவதை ஏற்க முடியாது எனவும் பெசெஷ்கியன் கூறியுள்ளார்.

இதனிடையே, அமெரிக்கா–ஈரான் இடையே மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரான் தரப்பு, அமெரிக்கா இராஜதந்திர தீர்வை நோக்கி உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore