பயண எச்சரிக்கை: 23 நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தல்

உலகின் 23 நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா தனது குடிமக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (US Department of State), தனது குடிமக்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையான ‘Level 4 – Do Not Travel’ பிரிவின் கீழ் இந்த 23 நாடுகளையும் பட்டியலிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள்:

  1. ஆப்கானிஸ்தான்
  2. பெலாரஸ்
  3. புர்கினா பாசோ
  4. மியான்மர்
  5. மத்திய ஆபிரிக்கக் குடியரசு
  6. சாட்
  7. கொங்கோ ஜனநாயகக் குடியரசு
  8. ஹெய்ட்டி
  9. ஈரான்
  10. ஈராக்
  11. லெபனான்
  12. லிபியா
  13. மாலி
  14. நைஜர்
  15. வட கொரியா
  16. ரஷ்யா
  17. சோமாலியா
  18. தெற்கு சூடான்
  19. சூடான்
  20. சிரியா
  21. உகாண்டா
  22. உக்ரைன்
  23. யேமன்

இந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் ஆயுத மோதல்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள், கடத்தல்கள், உள்நாட்டுக் கலவரங்கள் மற்றும் ஏனைய கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால், குறித்த நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கக் குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நாடுகளில் வசிக்கும் அல்லது தங்கியிருக்கும் அமெரிக்கக் குடிமக்கள், பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அதனைக் கருத்தில் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சில நாடுகளில் அவசரகாலச் சூழ்நிலைகளின்போது அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய உதவிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் எச்சரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த 23 நாடுகளுக்குமான பயண எச்சரிக்கைகள் அனைத்தும் புதிதாக வெளியிடப்பட்டவை அல்ல. ஒவ்வொரு நாட்டுக்குமான பாதுகாப்பு நிலைமைகளைப் பொறுத்து, தனித்தனியாக அவை வெவ்வேறு காலங்களில் மீளாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன.

எனவே, சர்வதேசப் பயணங்களைத் திட்டமிடும் அமெரிக்கக் குடிமக்கள், பயணத்திற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அந்தந்த நாடுகளுக்கான சமீபத்திய பயண ஆலோசனைகளைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore