கம்பி வலையில் சிக்கிய பெண் சிறுத்தை – பல மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க மருந்து கொடுத்து மீட்பு

நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டம் ஆத்தடி பிரிவில் இன்று (12) தேயிலைத் தோட்டப் பகுதியில் இரைதேடி வந்து கம்பி வலையில் சிக்கிய பெண் சிறுத்தை பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ரந்தெனிகல வைத்தியசாலையின் கால்நடை மருத்துவர் அகலநாக பின்தெனிய உள்ளிட்ட வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து மயக்க மருந்து கொடுத்து பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் நன்கு வளர்ந்த சிறுத்தையொன் றே இவ்வாறு சிக்கியுள்ளது. சிறுத்தை ஆக்ரோஷமாக இருந்ததால், மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

.மேலும் கம்பி வலையில் சிக்கியதால் வயிற்றில் பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த சிறுத்தை ஒரு பெண் என்று வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேயிலைத் தோட்டத்தில் நீரோடைக்கு அருகிலுள்ள புதரொன்றில் கட்டப்பட்டிருந்த கம்பி வலையில் சிறுத்தையின் வயிற்றுப் பகுதி சிக்கியுள்ளதாகவும், அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது அதன் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.சிறுத்தையின் வயிற்றுப் பகுதியில் சிக்கி இருந்த கம்பி அகற்றப்பட்டு, சிறுத்தைக்கு உடல் சோர்வாக இருந்ததால் கூண்டில் ஏற்றி சிறுத்தையை சிகிச்சைக்காக வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒரு கால்வாய்க்கு அருகில் இருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த கம்பி வலையில் சிறுத்தை வயிறு சிக்கியதாகவும், சிக்கிய அந்த சிறுத்தை தப்பிக்க முயன்றபோது அதன் வயிற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது
தேயிலைத் தோட்டங்கள் அடர்ந்த காடுகளாக மாறி உள்ளதால் சிறுத்தைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் காணப்படுவதாலும் சிறுத்தைகளுக்கு தேவையான இரைகள் அங்கு கிடைப்பதால் சிறுத்தைகள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன என்றும் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore