சர்வதேச இணையவழிப் பேச்சுப் போட்டியில் ‘Rising Star’ விருதைச் சுவீகரித்த சம்மாந்துறை மாணவி!

சர்வதேச இணையவழிப் பேச்சுப் போட்டியில் ஆங்கில மொழியில் தனது பேச்சாற்றலை வெளிப்படுத்தி, ‘Rising Star’ எனும் சிறப்பு விருதையும் சாதனைச் சான்றிதழையும் பெற்றுச் சம்மாந்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளார் அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி மொஹமட் நாஸர் அப்தா அஷ்கரி.

கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Speechmaze of America நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இணையவழியாகப் பங்கேற்றுள்ளனர்.

இப்போட்டியில் ஆங்கில மொழியை ஊடகமாகக் கொண்டு, “The Skill That School Doesn’t Teach But Everyone Needs” என்ற தலைப்பில் குறித்த மாணவி தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.

அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் தரம் 7 இருமொழிப் பிரிவில் கல்வி பயிலும் இவர், போட்டியின் 14 முதல் 16 வயதுக்குட்பட்ட இளையோர் பிரிவில் பங்கேற்றுள்ளார். இதன்போது, இவரது பங்கேற்பை அங்கீகரிக்கும் வகையில் Achievement Certificate எனும் சாதனைச் சான்றிதழும், ஆங்கிலப் பேச்சாற்றலில் வளர்ந்து வரும் திறமையைப் பாராட்டும் வகையில் ‘Rising Star’ எனும் சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளன.

தாய்மொழியுடன் ஏனைய மொழிகளிலும் தமது ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆர்வத்தை மாணவர்களிடையே ஊக்குவிப்பதில் இவ்வாறான வாய்ப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அந்த வகையில், சர்வதேசப் போட்டியில் பங்கேற்று இரண்டு அங்கீகாரங்களைப் பெற்றுள்ள மொஹமட் நாஸர் அப்தா அஷ்கரியின் இச்சாதனை, அவர் கல்வி பயிலும் பாடசாலைக்கும் சம்மாந்துறைப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore