சர்வதேச சந்தையில் திரவ பெட்ரோலிய வாயுவின் (LPG) விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் தனது வீட்டுப் பாவனை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
திருத்தப்பட்ட புதிய விலைகள் இன்று (நவம்பர் 13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்னர் 4,965 ரூபாவாகக் காணப்பட்ட குறித்த சிலிண்டரின் புதிய விலை 6,740 ரூபாவாக உயர்ந்துள்ளது.
அதேவேளை, 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையும் 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்னர் 1,988 ரூபாவாக இருந்த அதன் புதிய விலை 2,720 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் LPG விலை அதிகரித்துள்ளமையே இந்த விலைத் திருத்தத்திற்கான காரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





