பேஸ்புக்கு விருந்தில் சுற்றிவளைப்பு – 28 பேர் கைது

அம்பலாங்கொடை, போனதுவ பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 25 ஆண்களும் , 3 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய மற்றும் அம்பலாங்கொடை பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் குழுவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருள்களுடன் கைதாகியுள்ளனர்.

இவர்களிடமிருந்து 225 மில்லிகிராம் கொக்கைன், 8 கிராம் 125 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 2 கிராம் 400 மில்லிகிராம் கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 முதல் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் படபொல, ஊரகஸ்மன்ஹந்தி, பலபிட்டிய, ஹோமாகம, பேருவளை, அம்பலாங்கொடை, மீடியாகொட, வத்துகெதர மற்றும் அஹுங்கல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இச்சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore