அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – பொலிஸ் எச்சரிக்கை

போசன் பண்டிகையை முன்னிட்டு, அதிக சத்தம் எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள், சத்த அமைப்புகள் மற்றும் பயமுறுத்தும் ஒலி விளைவுகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், போசன் விடுமுறை காலத்தில் ஆறுகள், நீர்த்தேக்கங்கள், அருவிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு செல்லும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சாரதி மற்றும் பின்புற பயணியர் இருவருக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore