திருகோணமலை கடலில் மீனவப் படகு கவிழ்ந்து விபத்து!

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் மூன்று கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான படகில் இருந்த இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது.

குறித்த மீன்பிடிப் படகின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபர் தொடர்ந்து காணாமல் போயுள்ளார்.

அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் மூவரும் நேற்று (03) காலை மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் அந்த கடல் பகுதிக்கு சென்றிருந்தனர்.

இதன்போது அந்தப் படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சீனக்குடா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இந்த மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore