நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டோம்!

பிஃபா உலகக் கிண்ண தொடரின் ‘சுற்று 16’ நாக்-அவுட் போட்டியில் அர்ஜென்டினாவிடம் 3 – 2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறிய பிறகு, எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன் நடுவர் முடிவுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த போட்டியில், 67 ஆவது நிமிடம் வரை எகிப்து 2 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் இறுதிக்கட்டத்தில் அர்ஜென்டினா அபாரமாக கம்பேக் கொடுத்தது. 79 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியன் ரொமேரோவும், 84 ஆவது நிமிடத்தில் லியோனல் மெஸ்சியும் கோல் அடித்து ஆட்டத்தை 2 – 2 என சமன் செய்தனர். பின்னர் கூடுதல் நேரத்தின் 90+2 ஆவது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெற்றிக்கான கோலை அடிக்க, அர்ஜென்டினா 3 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹசன், “நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டோம். எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு பெனால்டி மறுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, அந்த முடிவு VAR மூலம் கூட சரிபார்க்கப்படவில்லை. நாங்கள் அடித்த 2 ஆவது கோலும் ரத்து செய்யப்பட்டது. ஒருவேளை நடப்பு உலக சாம்பியன் தொடரில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது மெஸ்சி தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதற்காகவோ இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம்” என்று குற்றம்சாட்டினார்.

எகிப்து பயிற்சியாளரின் இந்த கருத்து தற்போது கால்பந்து ரசிகர்களிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore