சிறைச்சாலை அதிகாரிகளுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சிறைச்சாலை அத்தியட்சகர்கள், ஜெயிலர்கள் மற்றும் சிறைச்சாலை திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளுடன் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலை நடத்தினார்.

இந்த சந்திப்பில், நாட்டின் சிறைச்சாலை அமைப்பு தற்போது எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றுக்கு அவசரமாக மேற்கொள்ள வேண்டிய தீர்வுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பணிச்சுமைகள், நலன்புரி வசதிகள் மற்றும் சேவை தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

தங்களது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைக்கக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவென தெரிவித்த அதிகாரிகள், அதற்காக ஜனாதிபதிக்கு நன்றியையும் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் மூத்த மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, நீதி அமைச்சின் செயலாளர், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore