ஈரானால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் வான்வழிச் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விமான நிலைய நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், குவைத்தின் தேசிய விமான சேவையான குவைத் எயார்வேஸ் (Kuwait Airways) தனது பெரும்பாலான விமானப் பயணங்களின் நேர அட்டவணையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
பயணிகள் தங்களது விமானப் பயணங்களின் புதிய நேரங்கள் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.





