ஹிரண பகுதியில் 18 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.





