2026 FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடரின் 3ஆம் இடத்திற்கான போட்டியில், இங்கிலாந்து அணி 6–4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
மியாமியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து அணிக்காக புகாயோ சாகா ஹெட்ரிக் கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
ஆட்டத்தின் 3ஆம் நிமிடத்தில் டெக்லான் ரைஸ் முதல் கோலைப் பதிவு செய்தார். தொடர்ந்து 18ஆம் நிமிடத்தில் எஸ்ரி கோன்சா கோல் அடிக்க, 37 மற்றும் 45+1 நிமிடங்களில் சாகா மேலும் இரு கோல்கள் அடித்து முதல் பாதியிலேயே இங்கிலாந்தை வலுவான முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
இரண்டாம் பாதியில் பிரான்ஸ் பதிலடி கொடுத்தது. கிலியன் எம்பாப்பே 48 மற்றும் 66ஆம் நிமிடங்களில் இரண்டு கோல்களையும், பிராட்லி பார்கோலா 54ஆம் நிமிடத்தில் ஒரு கோலையும் பதிவு செய்தார்.
எனினும், 87ஆம் நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றிய சாகா தனது ஹெட்ரிக்கை நிறைவு செய்தார். கூடுதல் நேரத்தில் உஸ்மானே டெம்பேலே பிரான்ஸுக்காக ஒரு கோல் அடித்த போதிலும், 90+8ஆம் நிமிடத்தில் ஜூட் பெலிங்ஹாம் இங்கிலாந்தின் 6வது கோலை அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.
1966ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற பின்னர், உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்து அணி பெற்றுள்ள சிறந்த நிலை இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.





