டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை – மொஜ்தபா கமேனி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நேற்று (18) வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் மீறி வருவதாக மொஜ்தபா கமேனி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்ததை அடுத்து, கடந்த வாரம் முதல் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பர தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore