மோட்டார் சைக்கிள் விபத்து: பருத்தித்துறை இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், பருத்தித்துறை, தும்பளைப் பகுதியைச் சேர்ந்த சின்னராசா துளசிகரன் (வயது 29) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞன், உடனடியாகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது வைத்தியசாலைப் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore