அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் சகோதரர் கைது

சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமான ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் டேட் ஆகியோர் அமெரிக்காவின் மியாமி, புளோரிடாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிட்டன் அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க மார்ஷல்ஸ் சேவையினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆண்ட்ரூ டேட் முன்னாள் கிக் பாக்ஸிங் உலக சாம்பியனாக இருந்து, பின்னர் சமூக ஊடகங்களில் ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மூலம் பிரபலமானவர். அவரது சகோதரர் டிரிஸ்டன் டேட்டும் சமூக ஊடக பிரபலமாகவும் தொழிலதிபராகவும் அறியப்படுகிறார்.

பிரிட்டன் அதிகாரிகள், இருவரையும் நாடு கடத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆண்ட்ரூ டேட் மீது பாலியல் வன்கொடுமை, மனிதக் கடத்தல், சிறுவர் தொடர்பான குற்றங்கள் மற்றும் தீவிர ஆபாச குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

டிரிஸ்டன் டேட் மீதும் பாலியல் வன்கொடுமை, பாலியல் தாக்குதல் மற்றும் மனிதக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகள் 2010 முதல் 2017 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இருவரும் தங்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளனர். அவர்களது சட்டத்தரணி, இந்த வழக்கு தங்களது சட்ட நடவடிக்கைகளை பாதிக்க முயலும் நடவடிக்கை என கூறியுள்ளார்.

இருவரும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் என்பதுடன், மியாமி மத்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாடு கடத்தல் நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore