வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (20) கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களுக்கு ‘Caution Level’ (எச்சரிக்கை நிலை) வெப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பகல் நேரங்களில் உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள்:
போதியளவு தண்ணீர் அருந்தவும்.
நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும்.
அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடுமையான வெளிப்புற உடற்பயிற்சி மற்றும் வேலைகளை குறைக்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





