ஆசிரியரின் கார் தீப்பற்றிய சம்பவம்: குழந்தி மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை – பழைய மாணவர் சங்கம் விளக்கம்

குருநாகல் | ஜூலை 20

குருநாகல் சர் ஜோன் கொத்தலாவல கல்லூரி ஆசிரியரின் கார் தீப்பற்றிய சம்பவத்தில், தீக்குச்சியை ஏற்றியதாக ஒப்புக்கொண்ட சுமார் 8 வயது சிறுவன் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்றும், இனியும் அவ்வாறு செய்யப்படமாட்டாது என்றும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பாடசாலை நிர்வாகம் குழந்தை மீது அழுத்தம் கொடுத்தது என்ற தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் சங்கம் மறுத்துள்ளது.

ஜூலை 3 அன்று பிற்பகல் 2.55 மணியளவில் பாடசாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆசிரியரின் கார் தீப்பற்றியது. பின்னர் ஆய்வு செய்யப்பட்ட CCTV காட்சிகளில், சிறுவன் தீக்குச்சிகளை ஏற்றி விளையாடியதும், ஒரு தீக்குச்சியை காரின் பின்பகுதிக்குள் வீசியதும் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்புறுதி கோரிக்கைக்காக மட்டுமே ஆசிரியர் குருநாகல் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும், அந்த முறைப்பாட்டில் சிறுவனின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 4 அன்று, பெற்றோருடன் அதிபர் மற்றும் பிரதியதிபர் முன்னிலையில் ஆஜரான சிறுவன், தீக்குச்சிகளை ஏற்றி அதில் ஒன்றை காரின் பம்பருக்குள் வீசியதாக ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பெற்றோரும் உறுதிப்படுத்தியதுடன், ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாக தந்தை தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சிறுவன் தற்போது வழக்கம்போல் பாடசாலைக்கு வருவதாகவும், அவரது பாதுகாப்பும் உரிமைகளும் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன என்றும் பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளி முடிந்த பிறகு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக 8 வயதிற்கும் குறைவான குழந்தையை கண்காணிப்பின்றி பாடசாலையில் விட்டுச் சென்றது பெற்றோரின் பொறுப்பின்மை என்றும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான முதன்மை பொறுப்பு பெற்றோருக்கே உரியது என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தை தவறான முறையில் சமூக ஊடகங்களில் பரப்பி, பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றவர்களை பழைய மாணவர் சங்கம் கண்டித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore