ஆண் மற்றும் பெண் நபர்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் சுற்றறிக்கையை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளது.
இம்மனுவை இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி அதிகாரியான சாந்த ஜயதிலக தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில் முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.
எனினும், மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்ததுடன், வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் குறித்த சுற்றறிக்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சட்டச் சவால் நிறைவுக்கு வந்துள்ளது.





