இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல, லக்ஷன் சந்தகன் மற்றும் இசுரு உதான உள்ளிட்டோர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) Level 2 பயிற்றுவிப்பு கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், கடந்த 13 ஆண்டுகளில் இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய அணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய 31 முன்னாள் வீரர்கள் இந்த தகுதியைப் பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் ஹஷான் திலகரத்ன, அவிஷ்க குணவர்தன, ரங்கன ஹேரத், உபுல் தரங்க, அஜந்த மெண்டிஸ், நுவான் குலசேகர, தினேஷ் சந்திமால் உள்ளிட்ட முன்னாள் தேசிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச அனுபவத்தையும் நவீன பயிற்றுவிப்பு முறைகளையும் இணைத்து, இலங்கையின் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதில் முன்னாள் வீரர்கள் தொடர்ந்து பங்களிப்பை வழங்குவதையே இந்த முயற்சி பிரதிபலிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.





