உகாண்டாவில் எபோலா பரவல் முடிவை நோக்கி – 42 நாள் கவுண்ட்டவுன் ஆரம்பம்

உகாண்டாவில் ஏற்பட்டிருந்த எபோலா (Bundibugyo virus) பரவல் முடிவடையும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக சிகிச்சை பெற்ற நோயாளி இரண்டு முறை பரிசோதனையிலும் வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 42 நாள் கண்காணிப்பு (Countdown) இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த 42 நாட்களுக்குள் புதிய எபோலா தொற்று எதுவும் பதிவாகவில்லை என்றால், உகாண்டா அதிகாரப்பூர்வமாக எபோலா பரவல் முடிவடைந்ததாக அறிவிக்கப்படும்.

2026 மே 15 அன்று உகாண்டா இந்த பரவலை அறிவித்தது. ஜூலை 16 வரை:

20 உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 15 பேர் காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து வந்த தொற்றுகள், 5 பேர் உள்நாட்டு பரவலால் பாதிக்கப்பட்டவர்கள்.

இதுவரை 836 தொடர்புடைய நபர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதுடன், 36 உயர் ஆபத்து மாவட்டங்களிலும், 38 எல்லை நுழைவாயில்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) சுமார் 70 நிபுணர்களை களமிறக்கி, ஆய்வக வசதிகள், நோயாளி கண்காணிப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் எல்லை கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

இருப்பினும், அண்டை நாடான காங்கோவில் இன்னும் எபோலா பரவல் தொடர்வதால், புதிய தொற்று உகாண்டாவுக்கு வந்தால் 42 நாள் கவுண்ட்டவுன் மீண்டும் முதல் நாளிலிருந்து தொடங்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உகாண்டா அரசு அடுத்த 6 மாதங்களுக்கு தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க புதிய செயல் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore