இங்கிலாந்தில் உள்ள இராணுவ தளத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் பஷீர் (31) என்பவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் சினகொக் தாக்குதலை நடத்திய ஜிஹாத் அல்-ஷாமி (35) என்பவருடன் இணைந்து, ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள பிரித்தானிய பாதுகாப்பு அகாடமியை கண்காணித்து தாக்குதல் திட்டமிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பஷீர், அல்-ஷாமியை 2025 ஆகஸ்ட் மாதம் 10 மணி நேர பயணமாக அந்த இராணுவ தளத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் அவருக்கு குறைந்தபட்சம் 17 ஆண்டுகள் சிறை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
நீதிபதி கூறுகையில், பஷீர் தீவிரவாத சிந்தனைகளில் உறுதியாக ஈடுபட்டிருந்ததாகவும், அவர் இன்னும் ஆபத்தான நபராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அல்-ஷாமி பின்னர் மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத வழிபாட்டு நிலைய தாக்குதலில் ஈடுபட்டு இரு யூதர்களை கொலை செய்த பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கான திட்டத்தில் பஷீர் நேரடியாக தொடர்புடையதாக ஆதாரம் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





