உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு, மேலதிக பரிசீலனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பதிலுரைகளை முன்வைத்தார்.
இதனையடுத்து, மேலதிக சமர்ப்பணங்களை எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி முன்வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





