கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (22) மாலை நான்கு சிறுவர்கள் இணைந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன சிறுவனைத் தேடும் பணியில் பிரதேசவாசிகள் மற்றும் கம்பளை பொலிஸார் ஈடுபட்ட நிலையில், இன்று கடற்படையின் சுழியோடிகளும் தேடுதல் நடவடிக்கையில் இணைந்தனர்.
தேடுதல் நடவடிக்கையின் போது இன்று பிற்பகல் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





