2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சிறுவர்கள் தொடர்பாக 5,523 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையான காலப்பகுதியில் பதிவான முறைப்பாடுகளில்,
சிறுவர்களை கொடுமைப்படுத்துதல் தொடர்பாக 1,100 முறைப்பாடுகள்
கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 60 முறைப்பாடுகள்
பாலியல் தொல்லைகள் தொடர்பாக 213 முறைப்பாடுகள்
சிறுவர் தொழிலாளர் தொடர்பாக 82 முறைப்பாடுகள்
இணையவழி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 112 முறைப்பாடுகள்
பதிவாகியுள்ளன.
மேலும், 2015 முதல் 2025 வரையான 10 ஆண்டு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 108,581 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பாதிக்கப்பட்ட சிறுவர்களை நீதிமன்றத்திற்கு நேரடியாக அழைக்காமல் காணொளி சாட்சியங்களை பதிவு செய்யும் புதிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





