பங்களாதேஷ் ஜனாதிபதி பதவி விலக முடிவு

பங்களாதேஷின் தற்போதைய ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தமது பதவியில் இருந்து விலகவுள்ளார்.

பதவிநீக்கப்பட்ட பிரதமரும் தனது முன்னாள் நண்பருமான ஷேக் ஹசீனா மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தகவல் வௌியான நிலையில், அவர் இந்த பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டில் தனது அரசாங்கம் கவிழ்வதற்குக் காரணமான, மாணவர் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கிய குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்நோக்கும் ஹசீனா, தாம் மீண்டும் பங்களாதேஷிற்கு செல்லவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி வௌியான சில நாட்களிலேயே ஷஹாபுதீனின் இந்தப் பதவி விலகல் முடிவு வெளியாகியுள்ளது.

அன்றிலிருந்து, ஆளும் பங்களாதேஷின் தேசியக் கட்சியின் (BNP) தலைவர்களால் ஷஹாபுதீன் பதவி விலகுமாறு கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று தாய்லாந்தில் இருந்து இன்று நாடு திரும்பவுள்ள பாராளுமன்ற சபாநாயகரிடம் ஷஹாபுதீன் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பார் என தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore