பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் T-56 ரக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது, பிள்ளையான் தொலைக்காணொளி (Video Conferencing) தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஏனைய இரு சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

குறித்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், சிவநேசத்துரை சந்திரகாந்தன் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

– மட்டக்களப்பு நிருபர்

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore