2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை இரண்டு அமர்வுகளாக நடைபெறும். முதல் வினாத்தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை, இரண்டாவது வினாத்தாள் காலை 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை நடைபெறும்.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
வருகைப் பதிவுகளில் திருத்தங்கள் தேவைப்பட்டால், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3 வரை பெற்றோர்களும் பாடசாலைகளும் இணையத்தின் ஊடாக திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
இந்த திருத்தங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளங்கள் மூலம் மேற்கொள்ளலாம் என்றும், மேலதிக தகவல்களுக்கு திணைக்களத்தின் உதவி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






