பலாங்கொடை | ஜூலை 25
பலாங்கொடை, மகாவலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போன நிலையில், அவரது சடலம் கஜுவத்த பகுதியில் அமைந்துள்ள குவாரி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி கடந்த ஜூலை 23 முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரது தந்தை பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மகாவலத்தென்ன – கஜுவத்த பகுதியில் உள்ள குவாரியில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலத்தின் பிரேதப் பரிசோதனை இன்று (25) பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





