அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தீப்பற்றி எரிந்த வீடொன்றிலிருந்து 6 குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின்போது, வீட்டின் உள்ளிருந்து 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
மீட்கப்பட்ட சில சடலங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்தச் சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





