ஊடகங்களை விமர்சித்த ட்ரம்ப்: வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு நிகழ்வில் சர்ச்சை பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் (WHCA) இரவு விருந்தில் பங்கேற்று, ஊடகங்களை விமர்சிக்கும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து நிறுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்வு, மீண்டும் வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய ட்ரம்ப், சில ஊடகங்களை “போலி செய்திகள்” என விமர்சித்ததுடன், அங்கிருந்த பல செய்தியாளர்கள் மீது “Trump Derangement Syndrome” எனப்படும் நிலை இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

எனினும், அவர் தனது உரையில் ஊடகங்களைப் பாராட்டியதுடன், “பெரும்பாலான ஊடகவியலாளர்களை மதிக்கிறேன்” எனவும் தெரிவித்தார்.

“நாம் எமது கருத்து வேறுபாடுகளை துப்பாக்கிகளால் அல்ல, திறந்த மற்றும் தீவிரமான விவாதங்கள் மூலம் தீர்க்க வேண்டும்” என ட்ரம்ப் கூறினார்.

இந்த நிகழ்வில், ஏப்ரல் மாத துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமெரிக்க இரகசிய சேவை அதிகாரி விக்டர் கொன்சாலஸுக்கு ட்ரம்ப் விருது வழங்கினார்.

சுமார் 700 பேர் மட்டுமே கலந்து கொண்ட இம்முறை நிகழ்வில், பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. விருந்தினர்கள் அடையாள அட்டைகள் மற்றும் QR குறியீடுகள் மூலம் பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

வெள்ளை மாளிகைக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து பதற்றமான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore