சிறைத் தண்டனைக்கு மாற்றாக வீட்டுக் காவல் முறை: புதிய சட்டத்தை விரைவுபடுத்த அமைச்சரவை அனுமதி

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை குறைக்கும் நோக்கில், பொருத்தமான சந்தர்ப்பங்களில் சிறைத்தண்டனைக்கு மாற்றாக வீட்டுக் காவல் (House Detention) முறையை அறிமுகப்படுத்துவதற்கான புதிய சட்டமூலத்தை விரைவுபடுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, தகுதியான சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளை, சில நிபந்தனைகளின் கீழ் விளக்கமறியல் அல்லது சிறைத்தண்டனைக்கு பதிலாக வீட்டுக் காவலில் வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்கு முன்னர் கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கான சட்டமூலம் சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மேலும் சில ஏற்பாடுகளை இணைக்க வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைய, மேலதிக ஏற்பாடுகளை உள்ளடக்கி சட்டமூலத்தை விரைவாக நிறைவு செய்யுமாறு சட்ட வரைஞருக்கு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore