சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை – கணபதிபுரம் பாடசாலை முன்பகுதி மற்றும் மலியத்தீவு ஆகிய இரு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத கசிப்பு (கள்ளச்சாராயம்) உற்பத்திக்காக பயன்படுத்தப்படவிருந்த மொத்தம் 200,000 மில்லிலிட்டர் (2 இலட்சம் மில்லி) ‘கோடா’ கைப்பற்றப்பட்டதுடன், அதனை வைத்திருந்த இரு சந்தேகநபர்களும் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கோடாவுடன் தொடர்புடைய வழக்குப் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள், அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனைக்கு அமைய, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரதீப் அவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டன.

நடவடிக்கையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரிபாய்தீன், போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விஜேவர்தன, பொலிஸ் சார்ஜன்ட்களான அசோக (43940), அனுர (63715), பொலிஸ் கான்ஸ்டபிள் நிரஞ்சன் (90096) மற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் நிலாந்தி (2472) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







