இலங்கை பொலிஸ் மா அதிபர் (IGP) தொடர்பாக முன்வைத்த கருத்துகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரை கொலை செய்வதற்கானதாகக் கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்துகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) முன்னிலையில் இன்று (10) காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக, பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தான் வெளியிட்ட கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று CCIB முன்னிலையில் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





