கிளிநொச்சி A9 வீதியில் சோகம்!

கிளிநொச்சி A9 வீதி தொண்டமாநகர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரஊர்திகள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ். நோக்கி சென்ற பாரஊர்தி வீதியில் நிறுத்தி பொருட்களை இறக்க முற்பட்ட வேளை அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பாரஊர்தியின் சாரதி உதவியாளரான 21 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

28 வயதான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore