2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 1,605 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 1,693 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர, இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
உயிரிழந்தவர்களில்:
🔹 555 பாதசாரிகள்
🔹 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்
🔹 119 மோட்டார் சைக்கிள் பின்னிருக்கையில் பயணித்தவர்கள்
🔹 115 மிதிவண்டி ஓட்டுநர்கள்
🔹 136 சாரதிகள்
🔹 162 பயணிகள்
உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை 3,125 பாரிய விபத்துகளும், 6,477 சிறிய விபத்துகளும், 2,388 சேத விபத்துகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வீதி விபத்துகளின் மொத்த எண்ணிக்கையில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.





