அடுத்த ஆண்டு இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை

இலங்கை பொலிஸாருக்கான புதிய சீருடை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து புதிய சீருடை தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 2027 ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் புதிய சீருடையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் தோற்றத்தை மாற்றுவது மட்டுமன்றி, பொலிஸ் சேவையின் தரத்தை மேம்படுத்துவதும், பொதுமக்களுக்கு மேலும் நட்பான சேவையை வழங்குவதும் இந்த மாற்றத்தின் நோக்கங்களில் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸ் அதிகாரிகளின் சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore