ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு – திகதி அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,000க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், பிரதிவாதிகள் தங்களது தற்காப்பு வாதங்களை கடந்த 17ஆம் திகதி முதல் முன்வைத்து வருகின்றனர்.

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore